உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

கொரோனா காலத்தில் சேவையாற்றிய இளைஞருக்கு: இலவச ஹஜ் யாத்திரை வாய்ப்பு.!!!

கொவிட்–19 பேரிடர் காலத்தில் தன்னார்வத்துடன் மனிதநேய சேவையில் ஈடுபட்ட இளைஞருக்கு, இவ்வாண்டு இலவசமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் உயிர் அச்சமின்றி அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இளைஞர் குழுவில் ஒருவரான மௌலவி சமீம் ஸலாமி என்பவரின் பெயர், அவருடன் பணியாற்றிய இளைஞர்களால் இந்த சிறப்பு வாய்ப்பிற்காக முன்மொழியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவருக்கான விமான பயணச்சீட்டுகள் மற்றும் ஹஜ் யாத்திரைக்கு தேவையான உத்தியோகபூர்வ ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு கடந்த (04) திங்கட்கிழமை சமய மற்றும் கலாசார பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

கொரோனா பேரிடர் காலத்தில் சமூக நலனுக்காக தன்னலமின்றி சேவையாற்றியவர்களை கௌரவிக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066754

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time