உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

பதுளை மடுல்சீமையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: மூவர் காயம்.!!!

பதுளை மடுல்சீமை பட்டவத்தை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்மேட்டில் சிக்கி அறுவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடரும் சீரற்ற காலநிலையினால் மடூல்சீமை பட்டவத்தை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் முற்றாக வீடு மூடப்பட்டுள்ளதாகவும் அனர்த்தம் இடம்பெறும் போது வீட்டில் 9 பேர் இருந்துள்ளதாகவும் ஊர் மக்களின் துரித முயற்சியினால் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அறுவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் மெட்டிக்காத்ததன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பசறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்சரிவினால் உயிரிழந்தவர்கள் 29 வயதுடைய எம் .ரஞ்சனி திருமணமான கர்ப்பிணி பெண் இன்னும் 24 வாரங்களில் அவரது பிரசவத்துக்கான திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

27 வயதுடைய பீ.பிரணீதகாந்தி அவரது 8 வயதுடைய மகள் ஆர்.சம்பிகா மற்றும் 2 1/2 வயதுடைய மகன் ஆர் .சர்மின் ஆகியோரும் , 19 வயதுடைய பீ. தேஷிகாவும் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் குறித்த பகுதிக்கு செல்லும் வீதி தாழிறங்கியமையினால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-ராமு தனராஜா-

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 804925

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time