உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

சமூக சேவைக்கான பங்களிப்பை பாராட்டி: ஹிஸ்புல்லாஹ் எம்.பிக்கு மட்டக்களப்பில் கௌரவம்.!!!

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் சமூகத்திற்காக ஆற்றிவரும் சேவைகளைப் பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு இன்று (14) கௌரவம் வழங்கப்பட்டது.

மக்களுக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருதல், உறுதியான பணிப்பற்று, சமூக நலனுக்காக மேற்கொண்ட அயராத முயற்சிகள் மற்றும் இன, மத வேறுபாடுகளை மீறிய சேவைகள் ஆகியவற்றை மதிப்பளிக்கும் வகையில் இந்த கௌரவம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் “தேசிய ஜோதி, சாமஸ்ரீ தேசமானிய, சமூக ஜோதி, சாதனைத் தமிழன்” உ. உதயகாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மையத்தின் உப தலைவர் “சமூக ஜோதி, தேசகீர்த்தி, தேசிய ஜோதி” எம். வை. ஆதம் மற்றும் ஊடகவியலாளர் எம். சாஜீத் ஆகியோர் இணைந்து கௌரவத்தை வழங்கினர்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் இ.எம். றுஸ்வின் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 880110

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time