உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

காத்தான்குடியில் நவீன உள்ளக விளையாட்டு அரங்கு: ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் குறித்து ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு.!!!

காத்தான்குடி ஆற்றங்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (13) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதன்போது, நவீன வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு அரங்கு (Indoor Stadium) ஒன்றை அமைக்கும் திட்டம் குறித்து அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய தரப்பினருடன் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், காத்தான்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்துவதற்கும், தேசிய மட்ட போட்டிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பெரும் ஆதரவாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆற்றங்கரைப் பகுதியின் முழுமையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இவ்வாய்வின் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிகழ்வில், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஈ.எம். றுஸ்வின் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 880106

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time