உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

July 8, 2026

Hot News

IMG-20260705-WA0042
போர், பாதுகாப்பு, மத மரபு: கமேனியின் இறுதிச்சடங்கு தாமதம் சொல்லும் செய்தி.!!!
IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!

Share :

சபாநாயகரை உத்தியோகபூர்வமாகச் சந்தித்த கடற்படைத் தளபதி; தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல்.!!!

-கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்-

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, செவ்வாய்க்கிழமை (07) இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் கௌரவ சபாநாயகர் (மருத்துவ) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.

இராணுவ மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் இலங்கை கடற்படையின் பங்களிப்பு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய நலன் தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மேலும், கடற்படை மற்றும் அரசின் முக்கிய நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் நிறைவில், இந்த உத்தியோகபூர்வ நிகழ்வை நினைவுகூரும் வகையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் சபாநாயகர் (மருத்துவ) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோர் நினைவுப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 958643

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time