காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியில் புதிய பணிப்பாளர் நியமனம் – முன்னாள் பணிப்பாளர் கௌரவிப்பு.!!!
-எம்.ஐ.அப்துல் நஸார்-
காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில், பணிப்பாளர் கௌரவிப்பு மற்றும் புதிய பணிப்பாளர் நியமனம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.
சனிக்கிழமை (09) மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) அவா்கள் தலைமையில் கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில் மேற்படி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இதன்போது கல்லூரியின் அபிவிருத்திக்கும் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்குப் 2011 தொடக்கம் 2026 வரை பங்காற்றிய முன்னாள் பணிப்பாளா் அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ.ஸெயினுல்ஆப்தீன் (மதனி) BA, அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவமளிக்கப்பட்டது.
கல்லூரியின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக புதிய பணிப்பாளராக கல்வி உளவியல் துறையில் முதுமாணி பட்டம் பெற்ற அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மன்சூர் (மதனி) MA மற்றும் பிரதிப் பணிப்பாளராக அஷ்ஷெய்க் எஸ்.எம்.பீ.எம்.அன்சாா் (மதனி) ஆகியோா் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டனர்.
ஏனையோருக்கும் சந்தா்ப்பங்களை வழங்கி அனுபவங்களை அதிகாிக்கச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பதவி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது மஃஹதுஸ்ஸுன்னா மகளிர் அரபுக் கல்லூரியின் முன்னாள் செயலாளா் அஷ்ஷெய்க் ஏ.ஏ.எம்.ஆரிஸ், (மதனி), கல்லூாியின் இடைநிலை பிாிவின் பகுதித் தலைவா் அஷ்ஷெய்க் ஏ.ஐீ.எம்.ஜெலீல் (மதனி), பிரதிப் பணிப்பாளா்களுள் ஒருவரான மௌலவியா சில்மியா தாாிக் (ஹைரியா) ஆகியோா் கருத்துரைகளை வழங்கினா்.
கல்லூரியின் கல்வி மற்றும் நிருவாகப் பணிக்குழாமினருடனான விசேட கலந்துரையாடல் மற்றும் ஒன்றுக்கூடல் ஆகியன இதனையடுத்து இடம்பெற்றன.
மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.அன்சாா் (மதனி) அவா்களால் தொகுத்தளிக்கப்பட்ட இந் நிகழ்ச்சிகளில் கல்லூரியின் பொருளாளா் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.மாஹிா், உபதலைவா் அல்ஹாஜ் எச்.எம்.ஏ.கபூா் (காதா் ஹாஜியாா்) உட்பட கல்லூரியின் நிருவாகிகள், கல்வி மற்றும் கல்விசாரா உத்தியோகத்தா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.









