உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

நிந்தவூரில் மக்களுக்கு புதிய வீடுகள்: 15 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டினார் எம்.பி அபூபக்கர் ஆதம்பாவா.!!!

-எம்.எஸ்.எம்.ஸாகிர்-

நிந்தவூர் பிரதேச
செயலகத்திற்குட்பட்ட   “தனக்கான ஓர் இடம் அழகான வாழ்க்கை”  எனும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (15) ஆரம்பித்து வைக்கப்பட்டது,

பிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர்  பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரசாங்கத்தால் நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 15 வீடுகளுக்கான அடிக்கல் நடும் இந்நிகழ்வில், நிந்தவூர்  பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான தோழர் சம்சுன் அலி, இப்திகார், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பிரதேச  செயற்பாட்டாளர்கள், பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் இணைப்பாளர் தோழர் சத்தார், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் இணைப்புச் செயலாளர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் உட்பட பிரஜாசக்தி தவிசாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066706

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time