உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

November 4, 2026

Hot News

IMG-20261102-WA0034
தரவரிசையில் முன்னேறும் இலங்கை; மக்களின் வாழ்க்கையில் எப்போது முன்னேற்றம்?
IMG-20261026-WA0070
பேரிடர்களின் பிடியில் உலகம்: இயற்கையின் எச்சரிக்கையும் மனிதகுலத்தின் பொறுப்பும்.!!!

Share :

கொழும்பு மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் 19 ஆக அதிகரிப்பு; பதுளைக்கு ஒரு ஆசனம் குறைப்பு.!!!

தேர்தல் மாவட்டங்களுக்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீட்டில் கொழும்பு மாவட்டத்திற்கு ஒரு ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்திற்கான ஆசனம் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு நவம்பர் 3ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கொழும்பு தேர்தல் மாவட்டத்திற்கு 18 நாடாளுமன்ற ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பதுளை தேர்தல் மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடு ஒன்றினால் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஏனைய 20 தேர்தல் மாவட்டங்களுக்குமான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகளில், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1292527

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time