உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

பாசிக்குடா கடலில் நீராட சென்றவர் மாயம் – தேடும் பணிகள் தீவிரம்.!!!

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடா கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் நேற்று (23) மாலை பெருங்கடல் அலைகளில் சிக்கி காணாமல் போனது தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போனவர் பொலன்னறுவை கல்கமுறவை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய பி.ஜி.நிஹால் பிதந்த என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முதல் இவரை தேடும் பணிகள் மும்முரமாக பொலிஸ் உயிர் மீட்பு பிரிவினர், கடற்படை உயிர் மீட்பு குழு, உள்ளூர்வாசிகள் ஆகியோர் இணைந்து காணாமல் போனவரைத் தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் எந்தவிதத்தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கரையோரப் பிரதேசங்களில் வசிப்போர் இவர் பற்றிய தகவல் ஏதும் கிடைத்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 932848

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time