உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

ரியாத் விமான நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்: 12 பேர் பலி; 309 பேர் காயம்.!!!

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக சவுதி அரேபிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் நால்வர் சவுதி அரேபியப் பிரஜைகள் எனவும், எகிப்திய விமானப் பணிப்பெண் ஒருவர் உட்பட எட்டு வெளிநாட்டவர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை யேமனைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியதாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சவுதி அரேபிய விமான நிலையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா முன்னெடுக்கும் தாக்குதல்களில் அமெரிக்கா இணைவது தொடர்பிலும் பரிசீலித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1221908

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time