உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

ராகம “ரணவிரு செவன” நலன்புரி மையத்துக்கு ஜனாதிபதி விஜயம்: சிகிச்சை பெறும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரணை.!!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (19) முற்பகல் ராகம பகுதியில் அமைந்துள்ள ரணவிரு செவன நலன்புரி மையம் நிலையத்திற்கு விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரித்தார்.

இதன்போது பாதுகாப்புப் படையினர்களுடன் சுமூகமாக கலந்துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அவர்கள் செய்த அர்ப்பணிப்பையும் சேவையையும் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” நிலையத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களுடனும் ஜனாதிபதி கலந்துரையாடினார். சிகிச்சை பெற்று வரும் படையினருக்கு மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் பிற வசதிகள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தி விசாரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்றிகோ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066796

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time