யாழ். போதனா வைத்தியசாலைக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட ரூ.3.6 கோடி பெறுமதியான கண் பரிசோதனை இயந்திரம் விபத்தில் சேதம்.!!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட வாகன விபத்தின் போது, கண் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக புதிதாக கொண்டுவரப்பட்ட விட்ரெக்டமி (Vitrectomy) நவீன இயந்திரமும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த நவீன இயந்திரத்தின் தேவை வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், அது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட சமயத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது இயந்திரத்தின் டிஸ்பிளே (Display) பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கண் சிகிச்சை இயந்திரத்தின் தற்போதைய சந்தைப் பெறுமதி சுமார் ரூ.36 மில்லியன் (ரூ.3.6 கோடி) எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விபத்தினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்து, இயந்திரத்தை மீண்டும் சீரமைக்க முடியுமா என்பது தொடர்பில் நிறுவனத்துடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
