உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

கோதுமை மாவின் விலை திடீர் உயர்வு; கிலோவுக்கு 17 ரூபாய் அதிகரிப்பு.!!!

பிரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி, கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை அதிகரிப்பு இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிகரிக்கப்பட்டுள்ள கோதுமை மாவின் விலை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (31) கூடவுள்ளது.

அன்றைய கூட்டத்தில், கோதுமை மாவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பாண் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை உயர்வு காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளிலும் மாற்றம் ஏற்படுமா என்பது தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1231759

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time