உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

September 19, 2026

Hot News

IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!
IMG-20260906-WA0028
சீருடை மாறுகிறது; காவல்துறையும் மாறுமா?

Share :

நட்டத்தில் சிக்கிய சதொச; 31 விற்பனையகங்களுக்கு மூடுவிழா.!!!

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (08) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்க மாதுகொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஓகஸ்ட் 17 ஆம் திகதி நிலவரப்படி, நாடு முழுவதும் 424 சதொச விற்பனையகங்கள் இயங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட போது, சதொச நிறுவனம் 24 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியிருந்ததாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அந்தக் காலப்பகுதியில் சதொச விற்பனை வலையமைப்பு 11 பில்லியன் ரூபாய் கடனையும், 5 பில்லியன் ரூபாய் வங்கி மேலதிகப்பற்றையும் (Bank Overdraft) கொண்டிருந்ததாகவும் ஆர். எம். ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1166767

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time