லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு; இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்.!!!
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலைத் திருத்தம் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டு பாவனை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 4,365 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 42 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2.3 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 815 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.