திருச்சி–யாழ்ப்பாணம் விமான சேவை ஒக்டோபர் 1 முதல் மீண்டும் ஆரம்பம்.!!!
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக உருவான விமான எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ விமான சேவையின் திருச்சி–யாழ்ப்பாணம் விமான சேவை மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் திருச்சி–யாழ்ப்பாணம் விமான சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த விமான சேவை வாரத்திற்கு மூன்று நாட்கள், அதாவது செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், குறித்த விமான சேவைக்கான ஆசன முற்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் இண்டிகோ விமான சேவையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாக ஆசனங்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.