பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ.10 அதிகரிப்பு.!!!
• கோதுமை மாவின் விலை உயர்வைத் தொடர்ந்து நடவடிக்கை.
இன்று நள்ளிரவு (31) முதல் 450 கிராம் எடையுடைய பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 29ஆம் திகதி கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாணின் விலையும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுடைய பாணுக்கு 10 ரூபாய் மேலதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.