சவூதி மன்னரின் விருந்தினராக ஹஜ் யாத்திரை: சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீனுக்கு வாய்ப்பு.!!!
காத்தான்குடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்களுக்கு சவூதி மன்னரின் விருந்தினராக இலவசமாக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் சிபாரிசின் பேரில் சவூதி மன்னரின் விருந்தினராக ஹஜ் யாத்திரைக்கு செல்லத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் எம்.எஸ்.எம். நூர்தீன் அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இம்முறை ஐந்து ஊடகவியலாளர்களுக்கு சவூதி மன்னரின் விருந்தினராக ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பை இலங்கைக்கான சவூதி தூதரகம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய, அவருக்கான விமானப் பயணச்சீட்டுகள் மற்றும் உத்தியோகபூர்வ ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (06) புதன்கிழமை காலை கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் இடம்பெற்றது.
மேலும், ஹஜ் யாத்திரைக்கான பயணம் எதிர்வரும் மே 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொழும்பில் இருந்து சவூதி அரேபியாவை நோக்கி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




