உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

காத்தான்குடி ஊடகவியலாளர்களுடன் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தலைவர் சந்திப்பு.!!!

-எம்.ரி.எம்.யூனுஸ்-

காத்தான்குடி பிரதேச ஊடகவியலாளர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ் அவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று (14) அல்-பஜ்ர் காரியாலயத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஊடகவியலாளர்களின் சமூகப் பொறுப்புகள், ஊடக ஒழுக்கநெறிகள், செய்தி சேகரிப்பின்போது எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், ஊடக ஒழுக்கநெறிகளை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்து கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், ஊடகத்துறையில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

இச்சந்திப்பில் ஊடகவியலாளர்களான மதியன்பன் மஜீட், எம்.எஸ்.எம். ஜவ்பர், எம்.ஏ.சி.எம். ஜெலீஸ், எம்.எச்.எம். அன்வர் உள்ளிட்ட பலரும், இளம் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 880110

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time