உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

இலங்கைக்கு மீண்டும் பெருமை; உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் ருமேஷ் தரங்க முதலிடம்.!!!

• சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரில் அபார சாதனை.

இலங்கையின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12ஆவது சுற்றில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமையின் மூலம் இந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் ருமேஷ் தரங்க, 88.14 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பெற்று வெற்றி பெற்றார்.

புதிய உலகத் தரவரிசையின்படி, ருமேஷ் தரங்க 1,363 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதுவரை உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜெர்மனியின் ஜூலியன் வெபர், தற்போது 1,342 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.

லோசான் டைமண்ட் லீக் சுற்றுப் போட்டி ஆரம்பமான போது, ஜூலியன் வெபர் உலகத் தரவரிசையில் முதலிடத்திலும், ருமேஷ் தரங்க இரண்டாவது இடத்திலும் இருந்தனர். எனினும், குறித்த போட்டியில் பங்கேற்க வேண்டாம் என வெபர் கடைசி நேரத்தில் தீர்மானித்திருந்தார்.

இதற்கிடையில், கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் 89.75 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து ருமேஷ் தரங்க தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தடகள வரலாற்றில் புதிய பெருமையைப் பதிவு செய்து, உலக ஈட்டி எறிதல் தரவரிசையின் உச்சியை மீண்டும் ருமேஷ் தரங்க கைப்பற்றியுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1231754

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time