உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260614-WA0054
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் நிழலில்: இலங்கையின் நீதியும் அதிகாரமும் - தொடரும் கேள்விகளும்.!!!
IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!

Share :

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளை வலுப்படுத்த; 39 புதிய வைத்தியர்கள் சேவையில் இணைப்பு.!!!

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிதாக நியமிக்கப்பட்ட 39 வைத்தியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (15) திங்கள் கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஆர். முரளீஸ்வரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிராந்தியத்தின் பொறுப்பு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். தனுஷியா ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் புதிய வைத்தியர்களுக்கு மாவட்ட சுகாதார சேவைகள் தொடர்பான விரிவான அறிமுகத்தை வழங்கினார்.

மேலும், பொறுப்பு வைத்தியர்கள் தங்களது துறை சார்ந்த விளக்கங்களை அளித்து, புதிய வைத்தியர்களுக்கான பணிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினர்.

இந்த புதிய வைத்தியர்களின் இணைவு, மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகளை மேலும் மேம்படுத்தும் என நம்பிக்கை வெளியிடப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 884755

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time