உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தமிழ்–சிங்கள புத்தாண்டு விழா.!!!

–பி.எம். பயாஸ்–

தமிழ்–சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய முறையில் பால் பொங்கி உணவு பரிமாறும் நிகழ்வு இன்று (14) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஆர்.என். அழகக்கோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு மரபுகளைப் பிரதிபலிக்கும் வகையில் பால் பொங்கும் நிகழ்வு நடத்தப்பட்டதுடன், பாரம்பரிய உணவு வகைகளும் பரிமாறப்பட்டன. இதனுடன், நிலையப் பொறுப்பதிகாரி புத்தாண்டு வாழ்த்துரையையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப் பிரிவு மற்றும் சிறுவர்–மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி மாதுசாந்த (IP), பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம். ரஹீம் (SI), சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி ஜெயசேக்கர (SI), பொலிஸ் உபதேசக் குழு செயலாளர் பி.எம். பயாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு பாரம்பரியங்களைப் பேணும் நோக்கில் இந்நிகழ்வு நடாத்தப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 759836

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time