உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணிக்கு; 15ம் தேதி வரை விளக்கமறியல்.!!!

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் இன்று (08) உத்தரவிட்டார்.

ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடை அணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்து வழக்காடித் தருவதாகக் கூறி பொதுமக்களிடமிருந்து பல இலட்சம் ரூபாவை மோசடி செய்ததுடன், சில உண்மையான சட்டத்தரணிகளையும் ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

கடந்த நவம்பர் 8ம் தேதி, ஓந்தாச்சிமடம் பகுதியில் வாடகைக்கு எடுத்திருந்த வீடு ஒன்றில் இருந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், தொடக்கத்திலிருந்து தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்று சிறைச்சாலையில் இருந்து மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை எதிர்வரும் 15ம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கை தொடர்பாக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 935171

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time