மொறட்டுவை கடற்பரப்பில் கடற்படை படகு விபத்து; 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி – ஒருவர் மாயம்.!!!
மொறட்டுவை, அங்குலானை கடற்பரப்பில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான டோரா ரக படகொன்று விபத்துக்குள்ளானதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கியவர்களில் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், 11 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், விபத்துக்குள்ளான கடற்படைக் கப்பல் மற்றும் கடற்பரப்பை கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான MI-17 ரக உலங்கு வானூர்தி மற்றும் Bell 412 ரக உலங்கு வானூர்தி ஆகியன குறித்த கடற்பரப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.