முச்சக்கரவண்டி விபத்து; பெண் பலி – சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயம்.!!!
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் விநாயகபுரம்–01 பிரதான வீதியில், திருக்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
பொலிஸார் தெரிவிக்கையில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் முதலில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




