உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260727-WA0030
டெங்கு: எண்களைத் தாண்டி எழும் தேசிய அவசரநிலை.!!!
IMG-20260719-WA0026
பொருளாதாரத்தை பாதுகாக்க வரி கண்காணிப்பு தீவிரம்: தவிர்ப்போருக்கு சட்ட நடவடிக்கை ஏன்? எதற்கு???

Share :

ஒக்டோபர் 1 முதல் காகிதமற்ற சுங்க ஆவண முறைமை அமுல்.!!!

• டிஜிட்டல் கையொப்பத்துடன் அரச சேவை நவீனமயமாக்கல் வேகமடைகிறது.

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் அரச சேவை நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, காகிதமற்ற சுங்க ஆவண செயலாக்க முறைமை (Paperless Customs Declaration Processing System) எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்தார்.

டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற ஆவண முறைமை தொடர்பான தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி நேற்று (28) கொழும்பு SEMA கட்டிட கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

உலக நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு டிஜிட்டல் மாற்றங்கள் அத்தியாவசியமானவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதியின் செயலாளர், காகிதமற்ற சுங்க ஆவண முறை அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் சுங்க அனுமதி வழங்கும் செயற்பாடுகள் வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், செயற்திறனுடனும் முன்னெடுக்கப்படும் என்றார்.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இம்முறை பெரும் வசதியை ஏற்படுத்தும் என்றும், டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணங்களில் பின்னர் மேற்கொள்ளப்படும் எந்த மாற்றங்களையும் இலகுவாகக் கண்டறிய முடிவதால் முறைகேடுகளுக்கு இடமளிக்கப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக நடவடிக்கைகள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமற்ற முறைமை அறிமுகப்படுத்தப்படுவதால் தொழில் இழப்பு ஏற்படாது என்றும், சுங்க அனுமதி முகவர்களின் தொழில்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

LankaSign டிஜிட்டல் கையொப்பமும் ASYCUDA கட்டமைப்பும் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் அனைத்து சுங்க ஆவணங்களையும் சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் இணையம் வழியாக சமர்ப்பிக்க முடியும் என்றும், இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வில் ASYCUDA கட்டமைப்புடன் LankaSign டிஜிட்டல் கையொப்பத்தை ஒருங்கிணைத்து காகிதமற்ற சுங்க ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் நடைமுறை, அதன் நன்மைகள் மற்றும் செயல்படுத்தும் முறை குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கேள்வி–பதில் அமர்வில் பிரதிநிதிகள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் ஆலோசனைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான விளக்கங்களையும் வழங்கினர்.

இந்நிகழ்வில் சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம, வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவு (RARMB) பணிப்பாளர் டப்ளியூ. எல். சி. திலகசிறி, LankaSign நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர் நாலக விஜேநாயக்க உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1009436

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time