காத்தான்குடி முதல் கல்குடா வரை அபிவிருத்தித் திட்டங்களுக்கு ரூ.10 மில்லியன் நிதி ஒதுக்கீடு.!!!
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆலோசனைக்கமைய, 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு–செலவுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 10 மில்லியன் அபிவிருத்தி நிதி மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 2.0 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மன்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை, காங்கேயனோடை மற்றும் ஹைராத் பகுதிகளுக்காக ரூபாய் 1.0 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
மன்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் மற்றும் குவைட் சிட்டி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 5 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, காத்தான்குடி, மன்முனைப்பற்று மற்றும் மன்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களுக்கு மொத்தமாக ரூபாய் 3.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக ரூபாய் 2.0 மில்லியனும், ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவுக்கு சுமார் ரூபாய் 1.0 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச செயலகங்களுக்கு மொத்தமாக ரூபாய் 3.0 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கல்குடா தொகுதிக்குட்பட்ட கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலகத்திற்கு ரூபாய் 1.4 மில்லியனும், கோரளைப்பற்று மத்தி (வாழைச்சேனை) பிரதேச செயலகத்திற்கு சுமார் ரூபாய் 2.1 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கல்குடா தொகுதிக்கு மொத்தமாக ரூபாய் 3.5 மில்லியன் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஊடாக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.