உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் துயர விபத்து: சொகுசு கார் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி.!!!

கல்முனை – சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயலின் பின்வீதியில் பாதையை விட்டு விலகிய சொகுசு கார் ஒன்று இன்று (27) முற்பகல் நீரில் பாய்ந்து ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆண், பெண் மற்றும் சிறுமி ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளனர்.

பாதையை விட்டு திடீரென விலகிய கார் முழுவதுமாக நீரில் மூழ்கிய நிலையில், சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக மீட்பு தொண்டர்கள் போராடிய பின்னர் கார் கரைக்கு இழுக்கப்பட்டு, உள்ளிருந்த மூவரும் வெளியே எடுக்கப்பட்டனர்.

உடனடியாக அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூவரும், அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த துயரச் சம்பவம் பிரதேச மக்களிடம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 932865

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time