உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!
IMG-20260928-WA0033
வெளிப்படையான மனிதவள நிர்வாகத்தை நோக்கி அரசின் புதிய டிஜிட்டல் அடி.!!!

Share :

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய்; இரண்டு தனியார் பேருந்துகள் பறிமுதல்.!!!

கந்தளாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, டீசலுக்குப் பதிலாக சட்டவிரோதமாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட இரண்டு தனியார் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கந்தளாய் போட்டான்காட்டு சந்தியில் நேற்று (12) மாலை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டியிலிருந்து உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலை நோக்கிப் பயணித்த இரண்டு தனியார் பேருந்துகளே பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது, டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி பேருந்துகள் இயக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதையடுத்து, இரண்டு பேருந்துகளும் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பேருந்துகளின் இரண்டு சாரதிகளும் கைது செய்யப்பட்டு, பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், சாரதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1214773

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time