உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

June 13, 2026

Hot News

IMG-20260607-WA0087
மத்திய கிழக்கு மோதலால் உலக உணவுப் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – இலங்கையும் பாதிப்பிலா.!!!
IMG-20260531-WA0017
கைத்தொலைபேசி கையில்: குழந்தைப் பருவம் ஆபத்தில்.!!!

Share :

பிரஜாசக்தி திட்டத்தின் கீழ்: 01 மில்லியன் ரூபாய் மதிப்பிலான வீடுகளுக்கு அடிக்கல் நட்டுவைப்பு.!!!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

“தனக்கான ஓர் இடம், அழகான வாழ்கை” எனும் தொனிப்பொருளில் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு, காரைதீவு, மாவடிப்பள்ளி ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான 01 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரஜாசக்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பர்ஹான், காரைதீவு செயற்பாட்டாளர்களான பத்மசீலன், ஆசிரியர் சுசி மற்றும் மாவடிப்பள்ளி அமைப்பாளரும், பிரஜாசக்தி தவிசாளருமாகிய சப்றூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஆசிரியர் ஆரிப் உட்பட பிரஜாசக்தி உறுப்பினர்கள், பொதுமக்கள், பயனாளிகள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 880120

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time