உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

“முழு நாடும் ஒன்றாக” நடவடிக்கை – ஒரே நாளில் 945 போதைப்பொருள் சந்தேகநபர்கள் கைது.!!!

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட “முழு நாடும் ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கையின் கீழ், டிசம்பர் 20ஆம் திகதி ஒரே நாளில் 945 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நடவடிக்கை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், போதைப்பொருள் விற்பனை, வைத்திருத்தல் மற்றும் கடத்தல் தொடர்பான பல வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக 16 பேர் தடுப்புக்காவல் உத்தரவுடன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்காக 17 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஐஸ் 637 கிராம், ஹெரோயின் 285 கிராம், கஞ்சா 3 கிலோ 432 கிராம் மற்றும் இதர பல்வேறு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த தேசிய நடவடிக்கையின் பிரதான நோக்கம், நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தை முறியடித்து, சமூக பாதுகாப்பையும் இளைஞர் தலைமுறையின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதே ஆகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 804878

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time