உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

August 27, 2026

Hot News

IMG-20260824-WA0060
வயது வரம்பு மட்டும் தீர்வா? – முச்சக்கர வண்டி ஓட்டுநர் தொழிலைச் சுற்றிய புதிய விவாதம்.!!!
IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!

Share :

ஆபாசப் படங்களை வெளியிட்ட Facebook குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்திய 21 வயது இளைஞர் கைது.!!!

சிறுவர்கள் மற்றும் பெண்களின் ஆபாசமான படங்களை வெளியிட்டு வந்ததாகக் கூறப்படும் Facebook குழுக்கள் மற்றும் பக்கங்களை நடத்தி வந்த நபர் ஒருவர், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இப்பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர், இன்று (27) காலை பெலியத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள சந்தேகநபரின் வீட்டிற்குச் சென்று அவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியும் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1100708

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time