நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு; 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாக தகவல்.!!!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, வெளிநாட்டினர் மற்றும் நேபாளக் குடிமக்கள் உட்பட குறைந்தது 384 சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தின் ரசுவா பகுதியில் போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, 291 வெளிநாட்டினர் மற்றும் 93 நேபாளக் குடிமக்கள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களின் நிலை குறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



