உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

October 14, 2026

Hot News

IMG-20261012-WA0039
இலங்கை அரசியலில் மாற்றத்தின் அளவுகோல் எது? மக்கள் எதிர்பார்ப்பும் அதிகாரத்தின் பொறுப்பும்.!!!
IMG-20261004-WA0025
போக்குவரத்து சட்ட அமுலாக்கத்தில் எழும் கேள்விகள்; பொலிஸாருக்கும் சாரதிகளுக்கும் தெளிவு அவசியமா.!!!

Share :

கூரைச் சூரிய மின் உற்பத்திக்கு தற்காலிக கட்டுப்பாடு; காலை 8 முதல் பிற்பகல் 3 மணி வரை செயலிழக்க அறிவிப்பு.!!!

விடுமுறை காலத்தில் நாட்டின் மின்சாரத் தேவை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், 300 கிலோவாட்டுக்கு மேற்பட்ட திறன் கொண்ட Rooftop Solar அமைப்புகளின் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துமாறு National System Operator (Pvt) Ltd அறிவித்துள்ளது.

இதன்படி, ஓகஸ்ட் 27 முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை குறித்த திறனை கொண்ட சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காகவே இந்தத் தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் மின்சாரத் தேவை குறைவடையும் நிலையில், தேசிய மின் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1231755

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time