நேபாள வெள்ளப் பேரழிவு; மீட்புப் பணிகளுக்கு உதவ இலங்கை தயார் – ஜனாதிபதி.!!!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவு வெள்ளத்தால் உயிரிழப்புகள் மற்றும் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை உதவத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேபாள மக்கள் எதிர்கொண்டுள்ள இந்த துயரமான சூழ்நிலையில், அவர்களின் வேதனையை இலங்கையும் பகிர்ந்து கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேபாளத்தில் வசித்து வரும் அல்லது அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு அவசர உதவி மற்றும் தேவையான தகவல்களை வழங்கும் வகையில், காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் 24 மணி நேர அவசர தொலைபேசி சேவையை ஏற்பாடு செய்துள்ளது.
அவசர தொடர்பு இலக்கம்:
📞 இலங்கை தூதரகம் – காத்மாண்டு:
+977 985 104 8653
நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் அவசர தேவைகள் ஏற்பட்டால் குறித்த தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.