உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்.!!!

இலங்கை அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேற்பட்ட ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (25) நடைபெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு 158 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 63 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர். வாக்கெடுப்பில் எவரும் வாக்களிப்பிலிருந்து விலகவில்லை.

இரண்டு நாட்களாக நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றது.

முன்னதாக, இந்தச் சட்டமூலத்திற்கு பொதுமக்களின் சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்திருந்ததுடன், குறிப்பிட்ட திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தேவையான விசேட பெரும்பான்மை பெறப்பட்டுள்ள நிலையில், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் அடுத்தடுத்த சட்டமன்ற நடைமுறைகளுக்கு நகர்கிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1185253

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time