உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி; இலங்கையில் விலைகள் இலட்சக்கணக்கில் வீழ்ச்சி.!!!

இலங்கையில் வாகனம் வாங்குவதற்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமான சந்தை நிலை உருவாகியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுத் தேவையை விட அதிகளவில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால், சந்தையில் வாகனங்களின் உபரி நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், உள்நாட்டில் நிலவிய தேவையை விட அதிகமான எண்ணிக்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் சந்தையில் வாகனங்களின் இருப்பு அதிகரித்துள்ளது.

முன்னர் நிலவிய அதிக விலைகளுடன் தற்போதைய அதிகப்படியான இருப்பும் இணைந்துள்ள நிலையில், வாகன விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக சில வாகன இறக்குமதியாளர்கள் தங்களிடம் உள்ள வாகனங்களை நஷ்டத்திற்கே விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இந்திக சம்பத் மெரெஞ்சி தெரிவித்துள்ளார்.

ரூ.4 இலட்சம் வரை விலை குறைவு:
தற்போது உள்ளூர் சந்தையில் பிரபலமாக காணப்படும் Toyota Yaris, Honda Vezel, Toyota Raize, Suzuki Wagon R, Daihatsu Mira மற்றும் Suzuki உள்ளிட்ட பல்வேறு வாகன மாடல்களின் விலைகள் சுமார் ரூ.300,000 முதல் ரூ.400,000 வரை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சில வாகன மாடல்களின் விலைகள் சுமார் ரூ.1 மில்லியன் வரை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தையில் தற்போதுள்ள அதிகப்படியான வாகன இருப்பு தொடருமானால், எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலைகள் மேலும் குறைவடையக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போதைய சந்தை நிலைமை, குறைந்த விலையில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1183727

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time