உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

50 இலட்சம் தேசிய அடையாள அட்டை அட்டைகள் கொள்வனவு; ஜேர்மன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.!!!

இலங்கையின் தேசிய அடையாள அட்டைகளை (NIC) தயாரிப்பதற்காக 50 இலட்சம் (5 மில்லியன்) முன் அச்சிடப்பட்ட Polycarbonate அட்டைகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2026 செப்டெம்பர் 22ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 50 இலட்சம் Pre-printed Polycarbonate அட்டைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், இதற்கான ஒப்பந்தத்தின் பெறுமதி 4.93 மில்லியன் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியைச் சேர்ந்த Mühlbauer ID Services GmbH நிறுவனத்திடமிருந்து குறித்த அட்டைகளை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த அட்டைகள் இலங்கையின் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் (Department for Registration of Persons – DRP) ஊடாக தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படவுள்ளன.

Polycarbonate அட்டை என்றால் என்ன?

Polycarbonate என்பது நீடித்த தன்மை கொண்ட பாதுகாப்பான பிளாஸ்டிக் வகை பொருளாகும். தேசிய அடையாள அட்டைகளுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அச்சு அம்சங்கள் முன்கூட்டியே அட்டையில் தயாரிக்கப்பட்டிருக்கும்.

பின்னர் தனிநபரின் பெயர், அடையாள இலக்கம், புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் தேசிய அடையாள அட்டை தயாரிப்பு செயல்முறையின் போது சேர்க்கப்படுகின்றன.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் சர்வதேச தரத்திலான முன் அச்சிடப்பட்ட அட்டைகள் மற்றும் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டைகளை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 இலட்சம் அட்டைகள் என்றால் 50 இலட்சம் பேருக்கு உடனடியாக புதிய NIC வழங்கப்படுமா?

இல்லை.

50 இலட்சம் அட்டைகள் கொள்வனவு செய்யப்படுவது என்பது தேசிய அடையாள அட்டைகளை தயாரிப்பதற்கான அட்டை கையிருப்பை (card stock) கொள்வனவு செய்யும் நடவடிக்கையாகும்.

இதனால் 50 இலட்சம் பேருக்கு உடனடியாக புதிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என பொருள் கொள்ள முடியாது. யாருக்கு எப்போது தேசிய அடையாள அட்டை வழங்கப்படும் என்பது விண்ணப்பம் மற்றும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் அடையாள அட்டை வழங்கும் நடைமுறைக்கு அமைவாக தீர்மானிக்கப்படும்.

மேலும், எதிர்கால Electronic National Identity Card (e-NIC) திட்டத்தின் கீழ் 15 வயதை நிறைவு செய்த இலங்கைப் பிரஜைகளுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கும் நோக்கம் தொடர்பாகவும் முன்னதாக அமைச்சரவை மட்டத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.

அந்தத் திட்டத்திற்காக சுமார் 1.7 கோடி (17 மில்லியன்) அட்டைகள் தேவைப்படலாம் எனவும் அடையாளம் காணப்பட்டிருந்தது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1185254

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time