உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260921-WA0076
“மாற்றம்” என்ற மக்கள் தீர்ப்புக்கு இரண்டு ஆண்டுகள்; சாதனைகள், சவால்கள், மக்கள் எதிர்பார்ப்புகள் என்ன?!!!
IMG-20260913-WA0058
மாணவர்களின் புத்தகச் சுமைக்கு முற்றுப்புள்ளி; 2027 முதல் புதிய கல்வி முறை.!!!

Share :

வங்கி முதல் வாகனப் பதிவு வரை; TIN இலக்கம் கட்டாயமாகும் – நவம்பர் 1 முதல் அமுல்.!!!

2026 நவம்பர் 1ஆம் திகதி முதல் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துநர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கொன்றை ஆரம்பித்தல், கட்டிட வரைபட அனுமதி பெறுதல், மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்தல் மற்றும் மோட்டார் வாகன உரிமத்தைப் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு செல்லுபடியாகும் TIN இலக்கம் அவசியமாகும்.

அத்துடன், காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல், வியாபாரத்தைப் பதிவு செய்தல், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் கடன் அட்டையைப் பெறுதல் போன்ற நடவடிக்கைகளின்போதும் TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட பொறுப்பு அதிகாரிகள் சமர்ப்பிக்கப்படும் TIN இலக்கம் செல்லுபடியாகும் நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் மின்னணு சேவை (e-Services) ஊடாக TIN இலக்கத்திற்காக விண்ணப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TIN இலக்கத்தைப் பெறுவதற்கான விண்ணப்பம்:
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் e-Services ஊடாக விண்ணப்பிக்கலாம்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1184407

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time