உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260628-WA0045
பற்றி எரியும் வர்த்தக நிலையங்களும்... முதலாளிமார்களின் அசட்டுப் போக்கும்.!!!
IMG-20260621-WA0046
வயதான பெற்றோர்களின் பாதுகாப்பும், சமூக பொறுப்பும்: புதிய சட்டமூலமும்.!!!

Share :

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில்; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட – 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு.!!!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் ரோஹன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று பாதசாரி கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் குழந்தை ஒன்றும் சிறுவன் ஒருவனும் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனி பிரதேசத்தைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 933508

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time