30,000 புதிய ஆசிரியர்கள் நியமனம்; கல்வித்துறையில் வரலாற்றுச் சாதனை படைக்கும் அரசு.!!!
நாட்டின் கல்வித்துறையை வலுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டில் மட்டும் சுமார் 30,000 புதிய ஆசிரியர்களை அரசுப் பாடசாலைகளில் இணைக்கும் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆட்சேர்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதன்படி, 23,000 பட்டதாரி ஆசிரியர்களும், தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற 6,100 ஆசிரியர்களும், கல்விமானி (B.Ed) பட்டதாரிகளும் இந்நியமனங்களில் உள்ளடக்கப்படவுள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் கல்வி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆசிரியர் ஆலோசகர்களையும் படிப்படியாக ஆட்சேர்ப்பு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், ஆசிரியர்களின் சமமான பரவலாக்கம், கல்வி நிர்வாகம் மற்றும் தரவு மேலாண்மை தொடர்பான சவால்களுக்கு தீர்வு காணவும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் கல்வி அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, கல்வித் துறையில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.