உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

5,575 சட்டவிரோத மதுபானப் போத்தல்கள் பறிமுதல்; ஒருவர் கைது.!!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,575 மதுபானப் போத்தல்களுடன் 43 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்படை மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (14) மேற்கொண்ட விசேட கூட்டு நடவடிக்கையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட கோட்டாபய கடற்படைத் தளத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5,575 மதுபானப் போத்தல்கள் மீட்கப்பட்டதுடன், அவற்றை வைத்திருந்த சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானப் போத்தல்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066939

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time