உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

நீருக்கடியில் சூட்சுமமாக மறைக்கப்பட்ட 8 இலட்சத்து 40 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா போதைப்பொருள் பறிமுதல்: காத்தான்குடி பொலிஸார் அதிரடி – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.!!!

(ஜே.கே)

நீருக்கடியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8 இலட்சத்து 40 ஆயிரம் மில்லி லீட்டர் கோடா போதைப் பொருளை காத்தான்குடி பொலிஸார் இன்று (22) காலை மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி மாவிலங்கத்துறை ஆற்றில் நீருக்கடியில் சூட்சுமமான முறையில் பரள்கள் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் பணிப்புரையின் கீழ் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.அழககோனின் வழிகாட்டலில் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையிலான காத்தான்குடி பொலிசார் நடாத்திய திடீர் சுற்றி வளைப்புகளின் போதே இப் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன

தப்பியோடிய சந்தேக நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806046

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time