உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

April 19, 2026

Hot News

Print
அமெரிக்கா – ஈரான் பதற்றம்: போர் பாதையா அல்லது சமாதான வாய்ப்பா.???
Print
காத்தான்குடி கடற்கரையில்: பொதுச் சொத்தையும், வாழ்வாதாரத்தையும் காக்கும் சமநிலை அவசியம்.!!!

Share :

கடலில் 400 கிலோ ஆவ்லியா மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது – அதிகாரிகள் தீவிர விசாரணை.!!!

-கற்பிட்டி எம். எச். எம். சியாஸ்-

கற்பிட்டி வன்னிமுந்தல் கடற்பரப்பில் சுமார் 400 கிலோ எடை கொண்ட பெரிய ஆவ்லியா மீன் ஒன்று நேற்று (17) இறந்த நிலையில் கடலில் மிதந்துள்ளது.

இதனை அவதானித்த சுற்றுலா குழுவினர் உடனடியாக கற்பிட்டி நாரா நிறுவனத்திற்கு தகவல் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து நாரா நிறுவன அதிகாரிகளின் பணிப்பின் பேரில் வன்னிமுந்தல் மீனவர்களின் உதவியுடன் குறித்த மீன் கரைக்கு கொண்டு வரப்பட்டது.

சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்த நாரா நிறுவன அதிகாரிகள், நிலைமையைப் பரிசோதித்து உடனடியாக கற்பிட்டி கண்டக்குழி குடாவில் அமைந்துள்ள வனஜீவிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து வனஜீவிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த ஆவ்லியா மீனை மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 766415

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time