எரிபொருள் நிரப்பும் நிலையம் முன்பு விபத்து; முதியவர் வைத்தியசாலையில் அனுமதி.!!!
– த. டிமேஷன் –
பசறை கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற சாலை விபத்தில் 75 வயதுடைய முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர் பசறை தபால் நிலையத்திற்கு அருகில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.
பசறை கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த முதியவர் மீது, பசறை நகரிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற டபுள் கெப் ரக வாகனம் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் திரும்பியபோது மோதியுள்ளது.
இதன் காரணமாக வாகனத்தின் சக்கரம் முதியவரின் காலின் மீது ஏறியதால் அவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் உடனடியாக உதவியளித்து, முச்சக்கர வண்டி மூலம் காயமடைந்தவரை பசறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

