வட கடலில் விபத்து; 11 இந்திய மீனவர்களை பத்திரமாக மீட்ட இலங்கை கடற்படை.!!!
வட கடற்பரப்பில் விபத்துக்குள்ளான இந்திய மீன்பிடிப் படகில் பயணித்த 11 இந்திய மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று (05) இரவு குறித்த மீன்பிடிப் படகு கடலில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அபாயத்தில் சிக்கியிருந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை கடற்படையினர் உடனடியாக விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
நீண்ட நேரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளின் பின்னர், இன்று (06) அனைத்து 11 இந்திய மீனவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு (Delft Island) பகுதிக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.