உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியில் விபத்து: சைக்கிளில் சென்றவர் பலி – சாரதி கைது.!!!

மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதான வீதியில் நவாஸ் பேக்கரிக்கு அருகில் இன்று (25) காலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூரைச் சேர்ந்த 84 வயதுடைய அலியார் ஜமால்தீன் என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காலை பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது சைக்கிளில் வீதியைக் கடக்க முற்பட்டபோது, மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் அதிவேகமாக பயணித்த எல்ப் ரக வாகனம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதிய தாக்கத்தில் முதியவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்திசாலையின் திடீர் மரண விசாரணையதிகாரி நசீர் சம்பவ இடத்திற்கு சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

விபத்தில் தொடர்புடைய எல்ப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066558

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time