விவசாய நீர்ப்பம்பி இயக்கும் போது: மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!!!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமி மலை பகுதியில் மின்சாரம் தாக்கி கிருஷ்ணபிள்ளை வீரசிங்கம் எனும் 59 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் இன்றையதினம் (11) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வாய்க்காலிலிருந்து பயிர்ச்செய்கைக்கு தேவையான நீரை நீர்ப்பம்பி மூலம் நீரை பெற முயன்ற போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


