உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

நோன்பை முன்னிட்டு – உணவகங்கள், வீதியோர கடைகள் திடீர் சுகாதார சுற்றிவளைப்பு.!!!

(பாறுக் ஷிஹான்)

நோன்பு காலத்தை முன்னிட்டு  உணவகங்கள் வீதியோர கடைகள்  விசேட பரிசோதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து  இன்று  மாலை கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  சகிலா இஸ்ஸதீனின் பணிப்புரைக்கமைய சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே.மதனின்  வழிகாட்டுதலின் கீழ்  வீதியோர கடைகள் உணவகங்களில்  விசேட சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது   உணவுப் பொருட்களின்  தரம்  சேமிப்பு முறை சுற்றுப்புறத் தூய்மை  பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் சமயலறைகள்  உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கடந்த காலங்களிலும் இவ்வாறான விசேட சோதனை நடவடிக்கை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இது தவிர மனித பாவனைக்கு  உதவாத தரமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக அதிகபட்ச நடவடிக்கை  எடுப்பதற்கு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1076816

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time