உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260809-WA0043
பொதுமக்களின் நிம்மதிக்கு புதிய பாதுகாப்பு; ஒலி மாசுக்கு கடும் கட்டுப்பாடு.!!!
IMG-20260802-WA0014
தேசிய ஷுஹதாக்கள் தினம்: வரலாற்றின் இரத்தச் சுவடுகளும் நல்லிணக்கத்தின் அவசியமும்.!!!

Share :

அக்குரேகொட இரட்டை படுகொலை: துப்பாக்கிதாரி கைது – சந்தேக நபர் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றதாக தகவல்.!!!

அக்குரேகொட பிரதேசத்தில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவற்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபர், துப்பாக்கிச் சூட்டிற்கு முன்னர் துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டி பகுதியில் உள்ள தங்குமிடத்திற்கு அழைத்து வந்ததாகக் கூறப்படுவதுடன், அவர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கஹதுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர், இந்தக் கொலையை வழிநடத்தியதாகக் கூறப்படும் ‘கரந்தெனிய சுத்தா’ என அழைக்கப்படும் குற்றவாளியின் நெருங்கிய துணைவராக இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், துப்பாக்கிதாரியை ஏற்றிச் சென்ற காரும், நாட்டை விட்டு தப்பிச் சென்ற நபர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் செல்ல வாடகைக்கு அமர்த்திய காரும் இன்று (21) பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 1066545

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time